நேபாளத்தில் சீரற்ற வானிலையால் 30 பேர் உயிரிழப்பு

ஓகஸ்ட் மாதம் ஏற்பட்ட வெள்ள பேரழிவைத் தொடர்ந்து நேபாளம் கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, இதுவரை சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின்படி, கடந்த வார இறுதி முதல்
1,900 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் 240 இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

அதுமட்டுமின்றி, பல சாலைகள், கட்டடங்கள் மற்றும் பாலங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

இந்த அனர்த்த சூழலானது நேபாளத்தின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles