
வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழா இன்று (19) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது
முருகப்பொருமானுக்கு அதிகாலையில் இருந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று காலை மூர்த்திகளுக்கு வசந்த மண்டப பூசைகள் நடைபெற்று விநாயகப் பெருமான் , சிவன் உமாதேவியார் சமேதரராயும் மற்றும் முருகப் பொருமான் வள்ளி தெய்வானை சமேதரராயும் வசந்த மண்டபத்திலிருந்து கொடித் தம்பத்துக்கு எழுந்தருளி கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது
இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்களை நடைபெறும் திருவிழாவில் எதிர்வரும் 11ஆம் திகதி தேர்த் திருவிழாவும் ஆடி அமாவாசை தினமான 12ஆம் திகதி கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும் தீர்த்த உற்சவம் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது
நாட்டின் பல பாகங்களில் இருந்தும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மாவை கந்தனின் கொடியேற்றத் திருவிழாவில் கலந்துகொண்டிருந்தனர்
