மலேசியாவில் 15 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து – 3 பேர் பலி; 9 பேர் காயம்!

மலேசியாவின் ஈப்போ வடக்கு – ஈப்போ தெற்கு விரைவுச் சாலையில் மேரு – பெர்ச்சாம் இடையே இன்று சனிக்கிழமை அதிகாலை 15 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 3 மோட்டார் சைக்கிளோட்டிகள் உயிரிழந்தனர்.

மேருவிலிருந்து தம்புன் நோக்கிச் சென்ற 12 மோட்டார் சைக்கிள்களும் 3 கார்களும் இந்த விபத்தில் சிக்கியதாக ஈப்போ மாவட்டப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகாலை 3.35 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், 19 மற்றும் 20 வயதிலான இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்றொரு 19 வயது இளைஞர் ஈப்போ ராஜா பெர்மாய்சூரி பைனூன் மருத்துவமனையின் அவசரப் பிரிவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

19 முதல் 25 வயதுக்குட்பட்ட மேலும் 9 மோட்டார் சைக்கிளோட்டிகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். காரோட்டிகள் மூவரும் காயமின்றித் தப்பினர்.

இச்சம்பவம் குறித்து 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் பொலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles