நேபாளத்திற்கு 11 தொன் அடங்கிய நிவாரணப் பொருள்களை இந்தியா இராணுவப் போக்குவரத்து விமானம் மூலம் காத்மண்டுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அதிகாரி தெரிவித்தனர்.
இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பகிர்ந்த எக்ஸ் தகவலின்படி,
அண்டை நாடான நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீட்சிப் பணிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றது.
மருந்துகள், தடயவியல் ஆய்வு பொருள்கள், கூடாரங்கள், சுகாதாரப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள், மற்றும் பிற பொருள்கள் என மேலும் 11 தொன் நிவாரணப் பொருள்களை நேபாளத்திற்கு அனுப்பியுள்ளோம்.
நேபாளத்தின் மீட்புப் பணிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.
இந்தியாவின் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்த புதிய தொகுப்பு நிவாரணப் பொருள்கள் இந்திய விமானப்படையின் சி-130 (C-130) விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
நேபாளத்தின் மீட்பு, நிவாரணம் மற்றும் தடயவியல் பணிகளுக்கு ஆதரவளிக்க, இந்தியா இதுவரை 130 டன்னுக்கும் அதிகமான நிவாரணப் பொருள்களை பல்வேறு கட்டங்களாக அனுப்பியுள்ளது. அத்துடன் 54 நிபுணர்களையும் அங்கு பணியமர்த்தியுள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
