அமெரிக்காவில் தடம் பதிக்கும் சிங்கப்பூர் நிறுவனங்கள்

சிங்கப்பூரின் உற்பத்தி நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் அதிக வாய்ப்புகள் உருவாகின்றன. வரி, கொள்கை மாற்றங்களால் அது சாத்தியமாகிறது.

அனைத்துலக விநியோகத் தொடர்களின் மறுசீரமைப்பால் சிங்கப்பூர் நிறுவனங்கள் பயன்பெறக் கூடிய வாய்ப்புகள் உருவாகியிருப்பதாக எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் கூறுகிறது.

புதிய இயந்திர மனித மென்பொருள் நிறுவனமான Augmentus 2024ஆம் ஆண்டு டெக்சஸில தடம்பதித்தது. அதிகரிக்கும் தேவையை ஈடுகட்டவும் பெரிய சந்தையில் நுழையவும் நிறுவனம் எண்ணியது.

செயற்கை நுண்ணறிவில் இயங்கும் இயந்திர மனிதக் கருவியைத் தயாரித்தது.

மனிதர்களின் கண், மூளையைப் போலவே அவைச் செயல்படும்; உற்பத்தி நடைமுறையின் ஒவ்வொரு கட்டத்திற்கும் ஏற்ப தன்னைச் சரிசெய்துகொள்ளும் ஆற்றல் அதற்கு உண்டு.

பிளாஸ்டிக் பாகங்களைத் தயாரிக்கும் சிங்கப்பூர் நிறுவனமான Sunningdale Tech நிறுவனம் அமெரிக்காவில் நிறுவனத்தை விரிவுபடுத்துகிறது.

அரிஸோனாவில் (Arizona) அமைந்திருக்கும் அதன் தொழிற்சாலை மருத்துவத் தொழில்நுட்பச் சந்தையில் சேவையாற்றுகிறது.

உள்ளூர் நிறுவனங்கள் எந்தச் சந்தையைத் தேர்ந்தெடுத்தாலும் அதற்கான வளர்ச்சி வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ளத் தொடர்ந்து உதவவிருப்பதாக எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் கூறுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles