அண்மையில் சிங்கப்பூர் கிழக்கு-மேற்குப் பாதையில் சென்று கொண்டிருந்த ரயில் புகுந்த எலியால் பரப்பரப்பு ஏற்பட்டது.
சிலர் எலியைத் தடுக்க முயன்றனர்; சிலர் ஒதுங்க எண்ணினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது்
ரயிலில் எலி ஓடித்திரியும் காட்சி இணையத்தில் பரவி வைரலனாது.
இதையடுத்து SMRT நிறுவனம் எலித் தொல்லையைக் கட்டுப்படுத்தக் கூடுதல் முயற்சி எடுக்கவிருக்கிறது.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு இனி ரயில் நிலையங்களிலும் பராமரிப்புச் சேவை நிலையங்களிலும் எலியை ஒழிக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ரயில் தடங்கள், நிலையங்களின் தளமேடை உள்ளிட்டவற்றின் வழியாக எலி ரயிலில் ஏறக்கூடும் என்று SMRT நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரயில்கள் தினமும் முறையாகச் சுத்தம் செய்யப்படுவதாகவும் அது CNAஇடம் தெரிவித்தது.
நிலையங்களிலும் ரயிலிலும் பயணிகள் உணவு அல்லது பானம் அருந்தக்கூடாது என்றும் நிறுவனம் மீண்டும் அறிவுறுத்தியது.
