வவுனியா, செட்டிகுளம் பிரதேசத்துக்குட்பட்ட ஆனைவிழுந்தான் கிராமத்தில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை தாக்கியதில் பலத்த காயங்களுக்குள்ளான குடும்பஸ்தர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஆமின் என்பவரே உயிரிழந்தவராவார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த செட்டிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
செட்டிகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள எல்லைக் கிராமங்களில் அண்மைக்காலமாகக் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
