யாழ்ப்பாண விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க கலாச்சார அமைச்சர் சம்மதிக்கிறார்; மீன்பிடி அமைச்சர் மறுக்கிறார்

புதிதாக அமைக்கப்பட்ட யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைப்பதற்கு கலாசார அமைச்சர் விருப்பம் தெரிவித்தாலும் அதே அரசாங்கத்தில் உள்ள மீன்பிடி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் மறுப்புத் தெரிவிப்பதாக இந்து பெளத்த அமைப்பின் இணைப்பாளர் கலாநிதி சிதம்பரமோகன் குற்றம் சாட்டினார்.

இன்று சனிக்கிழமை யாழில் இடம்பெற்ற சங்கிலி மன்னின் 407 ஆவது சிரார்த்த தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் லண்டனில் இருக்கும் அன்பர் ஒருவர் யாழ்ப்பாண விமான நிலையத்தில் வைப்பதற்காக நடராஜர் சிலையை அனுப்பியிருந்தார்.

அதனை வைப்பதற்கான முயற்சிகளை நானும் யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் விகாராதிபதியுடன் இணைந்து மேற்கொண்டோம்.

கலாசார அமைச்சர் விருப்பம் தெரிவித்த நிலையில் மத முரண்பாடு வந்துவிடும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் சிலையை வைக்க விடாமல் தடுக்கிறார்.

இந்த நிலை தொடர்வதால் விமான நிலையத்தில் வைப்பதற்காக கொண்டுவரப்பட்ட நடராஜர் சிலை நாகவிகாரைக்குள் ஒழித்து வைக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே இந்த விடையத்தை சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles