இரண்டாம் சங்கிலிய மன்னனின் 407ஆவது சிரார்த்த தினம் இன்று சனிக்கிழமை யாழ் நல்லூர் பகுதியில் உள்ள சங்கியன் உருவச் சிலையில் சிவத் தொண்டர் சிறீந்திரன் தலைமையில் இடம்பெற்றது இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் இரண்டாம் சங்கிலிய மன்னனுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம் பெற்றது.
அதனைத் தொடர்ந்து சங்கிலிய மன்னனின் வாழ்க்கை வரலாறு அடங்கிய கண்காட்சிக் கூடம் திறந்து வைக்கப்பட்டு விருந்தினர்கள் உரை இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் யாழ்.மாநகர ஆணையாளர் டி.வி.அரவிந்தராஜ், பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், சிறீசுந்தர ஆஞ்சனேயர் ஆலய பிரதம குரு சுந்தரேஸ்வர குருக்கள், இந்து சமய பேரவைத் தலைவர் சக்தி கிரீவன், சிவபூமி அறக்கட்டளைத் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
