சட்டவிரோத வெளிநாட்டுக் கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றத்துக்காக திருமதி சஷி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு வருட சிறைத் தண்டனை மற்றும் அபராதத்துக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.
குறித்த மனு மீதான தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதியரசர் மஞ்சுள திலகரத்ன, இந்த விவகாரத்தில் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்வதாகக் குறிப்பிட்டார்.
முறையற்ற ஆவணங்களைப் பயன்படுத்தி கடவுச்சீட்டுப் பெற்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட சஷி வீரவன்ஸவுக்கு, கடந்த 2022ஆம் ஆண்டில் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.
இந்தத் தண்டனையிலிருந்து தம்மைக் விடுவிக்குமாறு கோரி அவர் கொழும் மேல் நீதிமன்றத்தில் இந்த மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்த நிலையிலேயே, அந்த மனு இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.
