தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் படுகொலை ஒரு போர்க் குற்றமாகும் என்று ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரியாஷ் பாரூக் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் பாராளுமன்றில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கடந்த பாராளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் முன்வைத்த கருத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை பதில் வழங்கும் விதமாக அவர் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த பாராளுமன்ற அமர்வில் ரவூப் ஹக்கீம் வே. பிரபாகரனின் மகனின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்ற கருத்தை முன்வைத்திருந்தார். பாராளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி இந்த கருத்தை முன்வைத்தார். இந்த மரணத்தின்போது ஆட்சியில் இருந்தவர்கள் யார்இ பொறுப்புகூற வேண்டியவர்கள் யார்?இ 159 பாராளுமன்ற உறுப்பினர்களும் அன்று ஆட்சியில் இருந்தோமா? ஏன் அவரை ஆட்சியில் இருந்தவர்களும் பாராளுமன்றில் இருந்தவர்களும் காப்பாற்ற முன்வரவில்லை? – என்றும் கேள்வி எழுப்பினார்.
