மத்தியகிழக்கு போரால் பிரிட்டன் பொருளாதாரம் வீழ்ச்சி!

மத்தியகிழக்கு போரானது சர்வதேச பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்துள்ள நிலையில், பிரிட்டன் பொருளாதாரமும் பின்னடைவை சந்தித்துள்ளது.

இதற்கமைய கடந்த ஏப்ரல் மாதம் பிரிட்டன் பொருளாதாரம் 0.1 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

உலகளாவிய வர்த்தகத்திற்கான முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதைத் தொடர்ந்து, எரி பொருள்களின் விலைகள் எகிறின.

இதன் காரணமாக, நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் பிரிட்டன் பொருளாதாரம் காட்டிய வலுவான வளர்ச்சி, தற்போது தலைகீழாக மாறத் தொடங்கியுள்ளது.

பொருளாதார நிபுணர்கள் ஏற்கனவே கணித்திருந்தபடியே, ஏப்ரல் மாதத்தில் மொத்த தேசிய உற்பத்தி 0.1 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

எனினும், மார்ச் மாதத்தில் 0.3 சதவீத வளர்ச்சி பதிவாகியிருந்ததாக பிரிட்டன் தேசிய புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது.

இத்தரவுகள், நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பிரிட்டன் பொருளாதாரம் மேலும் சுருங்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலையிலும் பிரிட்டன் பொருளாதாரம் வலுவாகவே இருந்ததாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles