ஒரு குழந்தையினதும் 4 சிறுவர்களுடையதுமாக 7 எலும்புக்கூடுகள் இன்றைய தினம் செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டன.
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் மூன்றாவது கட்டமாக 24ஆவது நாளாக இன்று ஜூன் 14ஆம் திகதி பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போதே, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட ஒரு குழந்தையினதும் 4 சிறுவர்களுடையவையுமாக 7 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. இதேநேரம், மேலும் இரு எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன.
இதன்படி, செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 355 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில், 341 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.
