வலி. வடக்கு மக்கள் தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து நாளை – ஜூன் 15ஆம் திகதியுடன் 36 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதையொட்டி, யாழ்ப்பாணத்தில் இரு இடங்களில் போராட்டங்களை நடைபெறவுள்ளன.
1990 ஜூன் 15ஆம் திகதி இராணுவ நடவடிக்கை காரணமாக வலி. வடக்கு பகுதிகளிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்தனர். இதன்பின்னர், அந்தப் பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவம் அறிவித்தது. போர் முடிவடைந்த பின்னர் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த பகுதிகள் விடுவிக்கப்பட்டபோதும், இன்னும் பல பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயமாகவே உள்ளன.
இந்த நிலையில், தமது காணிகளிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும். தாம் சொந்த இடங்களில் மீளக்குடியேற அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து நாளைய தினம் போராட்டம் நடைபெற்றவுள்ளது.
யாழ். மாவட்ட செயலகம் முன்பாக நாளை திங்கட்கிழமை காலை போராட்டம் நடைபெறவுள்ளது. இதேவேளை, பலாலி சந்தியில் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை போராட்டம் நடைபெறும் என்றும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
