தென்னாபிரிக்காவுக்கு சுற்றுலா சென்ற கனேடிய முதியவர் ஒருவர், அங்குள்ள பூங்கா ஒன்றில் எதிர்பாராத வகையில் மரணமடைந்த துயரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
69 வயதுடைய கனேடியர் ஒருவர் தென்னாபிரிக்காவுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், புதன்கிழமை மாலை, Kruger தேசிய பூங்கா என்னும் சுற்றுலாத்தலத்துக்குச் சென்றுள்ளார்.
அங்கு, வழிகாட்டி ஒருவர் கையில் துப்பாக்கி வைத்திருக்க, கனேடியர் அவரிடம் சென்று, அந்த துப்பாக்கி உண்மையான துப்பாக்கியா என்று கேட்டுள்ளார்.
அந்த வழிகாட்டி அந்த துப்பாக்கி உண்மையானதுதான் என்பதை நிரூபிப்பதற்காக, அதை எப்படி இயக்குவது என்று அந்த கனேடியருக்கு செய்துகாட்ட, எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்துள்ளது. சற்றும் எதிர்பார்க்காத முதியவர் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விடயம் தொடர்பில் தென்னாபிரிக்க பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் கனேடிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
