சிறப்புற நடைபெற்ற சிங்கப்பூர் ஶ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத் திருக்குடமுழுக்கு

‘ஓம் சக்தி’, ‘பராசக்தி’ என்று எட்டுத் திக்கும் எதிரொலிக்க, சிங்கப்பூர் ஶ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் திருக்குடமுழுக்கு விழா நேற்று வியாழக்கிழமை பக்தி பூர்வமாக மிகச் சிறப்பாக நடந்தேறியுள்ளது.

காலை 9 மணிக்கு, சிவஶ்ரீ பாலமணி சிவாச்சாரியரின் தலைமையில் சிவாச்சாரியார்கள் புனித நீர் கொண்ட கலசங்களைத் தலையில் சுமந்து கோபுரத்தை நோக்கி நடந்தனர்.

இராஜ கோபுரத்திற்கும் மஹா மாரியம்மன் சன்னதியின் கோபுரத்திற்கும் காலை 10 மணிக்குத் திருக்குடங்களிலிருந்து நன்னீர் ஊற்றப்பட்டது.

குடமுழுக்கு விழாவில் உள்துறை அமைச்சரும் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு கா.சண்முகம் கலந்துகொண்டார். அவருடன் மனிதவள, கலாசார, சமூக, இளையர்துறைத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸும், நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றதைக் குறிக்கும் கல்வெட்டை அமைச்சர் சண்முகம் திறந்துவைத்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles