ஹெரோயின் போதைப்பொருடன் கைதானவரின் சொத்துக்கள் முடக்கம்!

ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட நபருக்குச் சொந்தமான பல சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் – அரியாலையைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டிருந்தார். அவருடைய சொத்துக்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

இதையடுத்தே, சட்டவிரோதமாக ஈட்டப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவருக்குச் சொந்தமான பல சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. டிங்கி படகு, இரண்டு மோட்டார் சைக்கிள்கள், சொகுசுக்கார் மற்றும் கப் ரக வாகனம் என்பனவே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன என யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles