யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அச்சுவேலி பாரதி வீதியைச் சேர்ந்த 21 வயதான குறித்த இளைஞன் சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெறுவதற்கு வாகன பயிற்சியை மேற்கொண்டவேளை குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பண்ணைப் பகுதியில் வாகனப் பயிற்சியை மேற்கொண்டதன் பின்னர், வாகனத்திலிருந்து வீதியில் இறங்கியபோது வீதியின் பின்புறத்தில் இருந்து வந்த லொறி மோதியதில் குறித்த இளைஞர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
