முடிவுக்கு வருகிறது இஸ்ரேல் பிரதமரின் அரசியல்: அதிர்ச்சி தரும் கருத்து கணிப்பு

இஸ்ரேலில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு முன்னதாக நடத்தப்பட்ட புதிய கருத்துக் கணிப்பில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசியலில் இருந்து விலக வேண்டும் என்று அந்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் விரும்புவது தெரியவந்துள்ளது.

சுமார் 59 சதவீத மக்கள் அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற கருத்தை முன்வைத்துள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக 33 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர்.

நெதன்யாகுவிற்குப் பிறகு லிகுட் கட்சியை வழிநடத்தக்கூடிய தலைவர்களாக நிர் பர்கத் மற்றும் யாரிவ் லெவின் போன்ற முக்கிய அமைச்சர்களை மக்கள் கருதுகின்றனர்.

இந்தத் தரவுகள் தற்போதைய அரசியல் தலைமை மீது இஸ்ரேலிய குடிமக்கள் கொண்டுள்ள அதிருப்தியை வெளிப்படுத்துகின்றன. இஸ்ரேலின் Channel 12 ஊடகமே மேற்படி கருத்து கணிப்பை நடத்தியுள்ளது.

இருப்பினும், இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை அல்லது பிழை வரம்பு குறித்த துல்லியமான தகவல்கள் முழுமையாகக் குறிப்பிடப்படவில்லை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles