அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள வோல்மார்ட் வணிக வளாகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள வோல்மார்ட் அங்காடி ஒன்றில் பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவதாக அங்குள்ள பொலிஸாருக்கு அவசரத் தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் அங்கிருந்த கார் ஒன்றை சோதனையிட முயன்றனர்.
அப்போது காரில் இருந்தவர்கள், தங்களை நோக்கி காரை மோத வந்ததனர் எனக் கூறப்படுகிறது. இதனால் தற்காப்பிற்காக பொலிஸார் காரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக விளக்கம் அளித்துள்ளனர்.
பொலிஸார் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டின் போது, காரின் உள்ளே தனது தாயுடன் இருந்த ஒரு வயது ஆண் குழந்தை மீது தோட்டாக்கள் பாய்ந்தன.
தாயின் கண்முன்னே நிகழ்ந்த இந்த கொடூர சம்பவத்தில், அந்த பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது
