உலக சாதனை படைத்தார் சூரியவன்சி

முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக ஒருநாள் அரைச்சதத்தை பதிவு செய்து இந்திய ‘ஏ’ அணியின் வைபவ் சூர்யவன்சி இன்று (21) உலக சாதனை படைத்துள்ளார்.

இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிராக தம்புள்ளையில் நடைபெற்று வரும் போட்டியிலேயே அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதில் வெறும் 11 பந்துகளில் அவர் அரைச்சதம் கடந்தார். அவரது இந்த அதிரடி ஆட்டத்தில் 5 ஆறு ஓட்டங்களும், 5 நான்கு ஓட்டங்களும் அடங்கும்.

29 பந்துகளில் 94 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் சஹான் ஆராச்சிகேவின் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார். இதனால் மிக அதிவேக சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார்.

இலங்கை, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான முக்கோணத் தொடரின் இறுதிப் போட்டி தற்போது தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles