சிங்கப்பூரில் ஆசிய பூனைக் கண்காட்சி

சிங்கப்பூரில் இவ்வாண்டின் ஆசிய பூனைக் கண்காட்சி புதிய அம்சங்களுடன் நடைபெறவிருக்கிறது.

புதிய பங்காளித்துவங்கள், பூனைப் பராமரிப்பு உள்ளிட்டவற்றைக் கொண்டாடும் புதிய நடவடிக்கைகள் ஆகியவற்றுடன் கூடுதல் பரப்பளவைக் கொண்ட பகுதியில் ஆசிய பூனைக் கண்காட்சி அரங்கேறவுள்ளது. இந்தக் கண்காட்சி ஜூன் மாதம் 27,28 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது.

நான்காவது முறையாக அரங்கேறும் இந்நிகழ்ச்சி சன்டெக் சிட்டி கண்காட்சி, மாநாட்டு நிலையத்தில் நடைபெறும். நான்கு அரங்கங்களில் நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் சிங்கப்பூர் உட்பட இந்த வட்டாரத்தைச் சேர்ந்த 150இற்கும் அதிகமான காட்சியாளர்கள் பங்கேற்கின்றனர்.

இவ்வாண்டுக் கண்காட்சியின்போது ஆக அதிக கவனத்தை ஈர்க்கும் அம்சங்களில் ஒன்று ‘ஹாபீஸ் ஃபேர் 2026’ எனப்படும் பொழுதுபோக்குப் பழக்கங்களை மையமாகக் கொண்ட நிகழ்ச்சியாகும். முதன்முறையாக ஆசிய பூனைக் கண்காட்சியின் பங்கேற்பாளர்கள் அதில் கலந்துகொள்ள முடியும்.

ஆசிய பூனைக் கண்காட்சியுடன் சேர்த்து ‘ஹாபீஸ் ஃபே 2026’ எனப்படும் பொழுதுபோக்குப் பழக்கங்களுக்கான நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் 250க்கும் அதிகமான காட்சியாளர்கள் பங்கேற்கின்றனர். கலை மற்றும் ஓவியப் படைப்புகள், அதிக மதிப்புமிக்கப் பழைமையான பொருள்கள், பரிமாறிக்கொள்ளப்படும் பொழுதுபோக்கு அட்டைகள், தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளிட்டவை ‘ஹாபீஸ் ஃபே 2026’இல் இடம்பெறும்.

ஆசிய பூனைக் கண்காட்சி, ‘ஹாபீஸ் ஃபே 2026’ இரண்டும் மொத்தமாக ஆறு அரங்கங்களில் நடைபெறும். மொத்தம் 400க்கும் அதிகமான காட்சியாளர்கள் அவற்றில் பங்கேற்கின்றனர். இரு நிகழ்ச்சிகளிலும் பூனைகள் இடம்பெறக்கூடும்.

பொருள் வாங்குவதையும் தாண்டி வருகையாளர்களை ஈடுபடுத்தும் ‘இன்டரேக்டிவ்’ தொழில்நுட்ப அம்சங்களும் நிகழ்ச்சிகளில் இருக்கும். ஆசிய பூனைக் கண்காட்சியின் சில்லறை விற்பனைக் கூடத்தில் பூனை சம்பந்தப்பட்ட உணவு மற்றும் அறைகலன்கள் போன்றவை விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும்.

புகைப்படக் கலைஞர்களை மகிழ்விக்கும் படமெடுக்கும் போட்டியும் இடம்பெறும். கேனன் சிங்கப்பூர் நிறுவனத்துடன் இணைந்து அந்தப் போட்டி நடத்தப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles