78 வயதிலும் தண்ணீரில் யோகா செய்து ஆரோக்கியம் காக்கும் பாட்டி

கேரளாவைச் சேர்ந்த 78 வயது ஓய்​வு​பெற்ற தாதி அன்னம்மா ட்ரூப் வயலுங்கர், சர்​வ​தேச யோகா தினத்தை முன்​னிட்​டு, கோட்​ட​யம் மாவட்​டத்​தில் உள்ள தனது பண்ணை வீட்டு நீச்​சல் குளத்​தில் தின​மும் 30 நிமிடங்​கள் அவர் மேற்​கொள்​ளும் ‘அக்வா யோகா’ (தண்​ணீரில் செய்​யும் யோகா) விவரங்​கள் வெளி​யாகி வைரலாகி உள்ளது.

1948ஆம் ஆண்டு பிறந்த அன்​னம்​மா, ஐரோப்​பா​வில் தாதியர் படிப்பை முடித்​து, ஜேர்​மனி மற்​றும் சுவிற்​ஸர்​லாந்து நாட்டு அரசு மருத்​து​வ​மனை​களில் தலை​மைச் தாதியாகப் பணி​யாற்றி ஓய்வு பெற்​றவர். சுவிற்​ஸர்​லாந்​தில் பணி​யாற்​றிய​போது சக தாதியர் ஒரு​வர் மூல​மாகவே இவருக்கு இந்த ‘ஜல யோகா’ (அக்வா யோ​கா) அறி​முக​மானது.

இதுகுறித்து அன்னம்மா கூறுகை​யில், ‘‘தண்​ணீரில் யோகா செய்​யும்​போது, நீரின் எதிர்ப்​புத் திறன் தசைகளை வலு​வாக்​கு​வதோடு இதய ஆரோக்​கி​யத்​தை​யும் மேம்​படுத்​துகிறது. இது நுரை​யீரல் ஆரோக்​கி​யத்​திற்கு மிகச் சிறந்​தது. கொரோனா பேரிடர் காலத்​தில்​தான் நுரை​யீரலின் முக்​கி​யத்​து​வத்தை உலகம் உணர்ந்​தது. நுரை​யீரல் ஆரோக்​கிய​மாக இருந்​தால் பல நோய்​களை எளி​தில் வெல்​லலாம்’’ என்​கிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles