சவூதி அரேபியாவில் ஹெலிக்கொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 14 பேர் உயிரிழந்தனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சவூதி அராம்கோ எண்ணெய் நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிக்கொப்டர் இன்று (28) ராஸ் தனுரா பகுதியில் விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஹெலிக்கொப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கான காரணத்தை கண்டறிவதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
