பிரான்ஸின் டோம்ப்லைன் நகரில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 11 பேர் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து இன்று காலை 11 மணியளவில் நான்சி நகருக்கு அருகே இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் விமானி உட்பட 10 ஸ்கைடைவர்கள் உயிரிழந்தனர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதுடன், தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதிகாரிகள் விபத்து குறித்த சாட்சியங்களை சேகரித்து வருகின்றனர். அத்துடன் விபத்து நடந்த பகுதியூடான போக்குவரத்தை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
