போருக்கு முடிவு காண நேரடி பேச்சுக்கு வாருங்கள் புடினுக்கு ஜெலன்ஸ்கி அழைப்பு

உக்ரைன் – ரஷ்யா போருக்கு முடிவு காண்பதற்கு நேரடிப் பேச்சுக்கு வருமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி விடுத்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதிக்கு அவர் எழுதிய பகிரங்க கடிதத்திலேயே இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

ரஷ்யாவின் நிகழ்வு ஒன்றில் புடின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து கொண்டிருந்த வேளையில் இந்தக் கடிதம் வெளியிடப்பட்டது. ரஷ்ய நகரமொன்றின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்திய மறுநாளே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

‘இந்தப் போர் ரஷ்யாவுக்கு அதிகளவான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி வருவதை ரஷ்ய மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். உங்கள் போருக்கு முடிவு தெரியவில்லை என்பதை அவர்கள் விரும்பவில்லை.

அமெரிக்காவின் கவனம் ஈரான் விவகாரத்திலிருந்து மீண்டும் உக்ரைன் போருக்கு திரும்பும் வரை காத்திருக்கக்கூடாது. இரு தலைவர்களும் மூன்றாம் நாட்டில் நேரடியாகச் சந்தித்து பேச்சு நடத்த வேண்டும் என்றும் ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார்.

‘இந்தப் போரை நானும் நீங்களும் நேரடியாக உரையாடுவதன் மூலம் முடிவுக்குக் கொண்டுவர உக்ரைன் முன்மொழிகிறது. நான் ஒரு சந்திப்பை முன்வைக்கிறேன். அதற்கு முன் முழுமையான போர்நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும். உண்மையான அமைதியை உருவாக்கும் முயற்சியே உரையாடலுக்கான சிறந்த தொடக்கம்’ – என்றும் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles