பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அரசியலிலிருந்து விரைவில் விலக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மக்ரோனின் பதவிக்காலம் இன்னும் சரியாக ஒரு வருடத்தில் முடிவடைய உள்ளது. 2017ஆம் ஆண்டு, தனது 37ஆவது வயதில் முதன்முறையாக பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியாக மக்ரோன் தேர்ந்தெடுக்கப்பட்டார்
2022ஆம் ஆண்டு, அவர் 2ஆவது முறையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரான்சில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.
பிரான்ஸைப் பொறுத்தவரை, அதன் அரசியலமைப்பின்படி ஒரு நபர் மூன்றாவது முறை ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது.
ஆகவே, அடுத்த தேர்தலில் மக்ரோன் போட்டியிட முடியாது. இந்த நிலையில், ஐரோப்பிய கவுன்ஸில் கூட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காக சைப்பிரஸ் தீவுக்கு சென்றுள்ள மக்ரோன், சைப்பிரஸின் தலைநகரான நிகோசியாவில் மாணவர்களிடையே உரையாற்றினார்.
அப்போது அவர், நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன் அரசியலில் ஈடுபடவில்லை. என் பதவிக்காலம் முடிந்த பின்பும் நான் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று கூறினார்.
இதையடுத்து தனது பதவிக்காலம் முடிவடைந்தபின், மக்ரோன் அரசியலுக்கு முழுக்குப் போட இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
