சிவகுமாரனின் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நடந்தது

தியாகி பொன். சிவகுமாரனின் 52ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று வெள்ளிக்கிழமை உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

உரும்பிராயிலுள்ள சிவகுமாரன் திருவுருவச் சிலை முன்பாக வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தி. நிரோஷ் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பொது ஈகைச் சுடரை பொன். சிவகுமாரனின் சகோதரி சிவகுமாரி ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஏனையோர் தீபங்களை ஏற்றினர். தொடர்ந்து, பொன். சிவகுமாரன் உள்ளிட்ட இன விடுதலைக்காக தம் இன்னுயிரைத் தியாகம் செய்த போராளிகள், பொதுமக்களை நினைவு கூர்ந்து அகவணக்கம் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, திருவுருவச்சிலைக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு, உரை நிகழ்த்தப்பட்டது.

இந்த நிகழ்வில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம், சட்டத்தரணி காண்டீபன், சட்டத்தரணி மணிவண்ணன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பொன். சிவகுமாரன் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராவார். இதற்காக தேடப்பட்டு வந்த அவர் பொலிஸாரின் முற்றுகையில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து, சயனைட் உட்கொண்டு 1974.06.05ஆம் நாள் வீரச்சாவடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Group of adults standing with heads bowed at an outdoor ceremony, yellow wall and decorative flags in the background.

Group of men offering garlands to a golden statue in a yellow outdoor shrine.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles