யாழ். சிறைச்சாலையின் மேலே ‘டிரோன்’ பறக்க விட்டவர் கைது!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேலே ‘டிரோன்’ பறந்தமையால் சிறைச்சாலை நிர்வாகத்திடையே பதற்றம் ஏற்பட்டது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேலே நேற்று மாலை 5 மணியளவில் அடையாளம் காணப்படாத ‘டிரோன்’ ஒன்று சில நிமிடங்கள் வட்டமிட்டது. ‘டிரோனை’ அவதானிப்பதற்குள் அது அங்கிருந்து அகன்றதால் பெரும் பரபரப்பு நிலவியது.

இதேநேரம் இந்த டிரோனை இயக்கியவர்கள் தொடர்பில் கண்டறியுமாறு சிறைச்சாலை நிர்வாகத்தால் உடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதோடு  சிறை பாதுகாப்பும் உஷார் செய்யப்பட்டது.

இதன்பின்பு இடம்பெற்ற தேடுதலின்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அமைக்கப்படும் பாலங்கள் தொடர்பில் கண்காணிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட ‘டிரோன்’ அது எனக் கண்டறியப்பட்டது.

பாலங்களைக் கண்காணிக்க அனுமதி பெறப்பட்டபோதும் சிறைச்சாலையின் மேலால் இயக்கியமைக்காக டிரோனை இயக்கியவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles