அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள மனு தொடர்பான இடையீட்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.
இதன்படி, குறித்த இடையீட்டு மனுக்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4 மற்றும் 6ஆம் திகதிகளில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பெங்கமுவே நாலக தேரர் மற்றும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட 8 தரப்பினர் இந்த வழக்கில் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனுக்கள் இன்று (17) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோது, சுரேஷ் சலே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தனவின் சமர்ப்பணங்கள் நிறைவடைந்த பின்னர் இடையீட்டு மனுக்கள் பரிசீலிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசர் ரோஹந்த அபேசூரிய தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இடையீட்டு மனுதாரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகளின் இணக்கப்பாட்டுடன், குறித்த மனுக்கள் ஓகஸ்ட் 4 மற்றும் 6ஆம் திகதிகளில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளன.
