செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு பணிகளில் இன்றைய தினம் மேலும் 8 சிறுவர்களுடையவை உட்பட 9 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாவது கட்டமாக இன்று செவ்வாய்க்கிழமை அகழ்வுப் பணிகள் நடைபெற்றன.
இதன்போது, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த 8 சிறுவர்களுடையவை உட்பட 9 எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. இதேநேரம், ஒரு சிசுவின் எலும்புக்கூடு உட்பட மேலும் 9 எலும்புக்கூடுகள் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டன. இவற்றை அகழ்ந்தெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறவுள்ளன.
இன்றைய அகழ்வுப் பணிகளின்போது, ஒரு எலும்புக்கூட்டின் மேற்பகுதியில் இருந்து நாணயக் குற்றி ஒன்றும் மீட்கப்பட்டு, சான்றுப் பொருளாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் மொத்தமாக 327 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 311 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
