மாணவி வித்தியா படுகொலை குற்றவாளியின் உடலை ஏற்க மறுத்த மனைவி!

மாணவி வித்தியா படுகொலை குற்றவாளியான பூபாலசிங்கம் ஜெயக்குமாரின் உடலை பொறுப்பேற்க அவரின் மனைவி மறுத்துவிட்டார்.

இதனால், அவரின் இறுதிச் சடங்கை அரச செலவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிய வருகிறது.

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் என்பவர் இன்றைய தினம் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலேயே அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

பிரேத பரிசாதனைகளின் பின்னர் அவரின் உடலை இறந்தவரின் மனைவியிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், பொருளாதார நிலைமை காரணமாக இறுதிச் சடங்கை தன்னால் நடத்த முடியாது என்று கூறி சடலத்தை பொறுப்பேற்க அவர் மறுத்து விட்டார்.

இதையடுத்து, அவரின் சடலத்தை அரச செலவில் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles