டிக்கோயா இரட்டைக்கொலையின் முக்கிய சந்தேகநபர் கைது!

நுவரெலியாவில் வயோதிப தம்பதியரை படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நுவரெலியா – ஹற்றன் – டிக்கோயாவில் மூன்று தினங்களுக்கு முன்னர் தம்பதியர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முடுக்கிவிட்டிருந்த பொலிஸார் சி.சி.ரீ.வி காட்சிகளின் அடிப்படையில் பிரதான சந்தேக நபரை அடையாளம் கண்டிருந்தனர்.

அவரைக் கைது செய்வதற்கு உதவுமாறு பொதுமக்களிடமும் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையிலேயே, தோட்டக் குடியிருப்பு ஒன்றில் தலைமறைவாகியிருந்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்னர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles