சீன நிலக்கரிச் சுரங்கத்தில் வெடிவிபத்து: 90 தொழிலாளர்கள் உயிரிழப்பு

வடக்கு சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட எரிவாயு வெடிவிபத்தில் 90 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 16 ஆண்டுகளில் சீனாவில் ஏற்பட்ட மிகப் பெரிய சுரங்க விபத்தாக இது பதிவாகியுள்ளது. ஷான்ஸி மாகாணத்தின் சின்யுவான் கவுண்டியில் உள்ள லியுஷென்யு நிலக்கரிச் சுரங்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த விபத்து நிகழ்ந்தது.

அப்போது மொத்தம் 247 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் 90 பேர் உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்ட சுமார் 123 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும், மாயமான 9 பேரைத் தேடும் பணியில் 755இற்கும் மேற்பட்ட பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். விபத்து குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக சுரங்க நிறுவனத்தின் சில முக்கிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்திற்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும், காயமடைந்தவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்கவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles