காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் மட்டக்களப்பில் விசாரணை!

காணாமல் போனோர் தொடர்பான பணிமனையால் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடியில் விசாரணைகள் நடத்தப்பட்டன.

இந்த விசாரணைகளில் மண்முனை தென் எருவில் பற்று, போரதீவுப்பற்று, மண்முனை தென் மேற்கு மற்றும் மண்முனைப் பற்று ஆகிய பிரதேசங்களிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 40 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

காணாமல் போனவர்கள் பற்றிய பணிமனையின் ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, குழு தலைவர் விமலநாதன், பிராந்திய இணைப்பாளர் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் இன்று காலை முதல் மாலை வரை இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

Six people in a formal meeting around a glass conference table, reviewing papers and taking notes, with snacks and water on the table.Group of elderly women sitting in plastic chairs in a room with stacked boxes and cardboard boxes in the background; a child drinks from a juice carton. Group of Indian adults around a table filled with documents; a woman in a pink saree helps with paperwork in a bright room.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles