கிழக்கு ஆபிரிக்க நாடான உகாண்டாவில் பாடசாலை சுற்றுலா முடிந்து திரும்பிய பஸ் விபத்துக்குள்ளானதில் 20 மாணவர்கள் மற்றும் பாடசாலையின் நிறுவுனர் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
உகாண்டா தலைநகர் கம்பாலாவில் அமைந்துள்ள கிங் டேவிட் ஜூனியர் பாடசாலைக்குச் சொந்தமான பஸ்ஸில் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் அப்பகுதியில் உள்ள புகழ்பெற்ற சிபி நீர்வீழ்ச்சிக்கு கல்வி சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலா முடிந்து மீண்டும் அவர்கள் பாடசாலைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பயணத்தின்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், திடீரென வீதியை விட்டு விலகிச் சென்று அங்கிருந்த பெரும் பாறை ஒன்றின் மீது மோதி கவிழ்ந்துள்ளது.
மேலும், பேருந்தில் பயணித்த பல குழந்தைகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
