1958ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கால்பந்து இறுதிப் போட்டியில் பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே அணிந்து விளையாடிய ரீ-சேர்ட் நியூயோர்க்கில் நடைபெற்ற ஏலத்தில், 49 இலட்சம் அமெரிக்க டொலருக்கு சுமார் 47.18 கோடி ரூபாவிற்கு விற்பனையாகியுள்ளது.
1958 ஆம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் பிரேசில் அணி 5-2 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனை வீழ்த்தி கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், பீலே 2 கோல்களை அடித்து அசத்தியிருந்தார்.
கால்பந்து வீரர் ஒருவரின் ரீ-சேர்ட் ஏலம் போன வரிசையில் இது உலகளவில் 2ஆவது அதிகபட்ச விலையாகும். (முன்னதாக 2022இல் ஆர்ஜென்டினா ஜாம்பவான் டீகோ மரடோனாவின் ரீ-சேர்ட் 93 இலட்சம் டொலருக்கு ஏலம் போனதே முதலிடத்தில் உள்ளது).
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ரீ-சேர்ட் பீலே தன் நண்பரும் சக வீரருமான, டிடாவுக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தார். டிடாவின் குடும்பத்தினர் இதனைப் பிரேசில் அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்ட நிலையில், தற்போது ‘சோத்பி’ நிறுவனம் மூலம் இது ஏலம் விடப்பட்டுள்ளது.
