ஜம்மு காஷ்மீரில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்​றும் ரஜோரி மாவட்​டத்​தில் நேற்று அதி​காலை பெய்த கனமழை​யால் திடீர் வெள்​ள​மும் நிலச்சரி​வும் ஏற்​பட்​டன. இதில் சிக்கி 11 பேர் உயி​ரிழந்​தனர், மேலும் பலர் மாய​மாகி​யுள்​ளனர்.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்​றும் ரஜோரி மாவட்​டங்​களில் நேற்று முன்​தினம் இரவு முழு​வதும் கனமழை பெய்​தது. இதையடுத்து நேற்று அதி​காலை​யில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டதுடன் நிலச்சரிவும் ஏற்​பட்​டது. வெள்ளத்தில் 250இற்கும் மேற்பட்ட கார்கள் அடித்து செல்லப்பட்டன. பல வீடுகள் இடிந்தன. சாலைகள் சேதமடைந்தன.

ரஜோரி நகரின் தாழ்​வான பகு​தி​களில் வெள்​ளம் சூழ்ந்​த​தால், அப்பகு​தி​யில் வசித்த பொது​மக்​கள் பாது​காப்​பான இடங்​களுக்கு அப்​புறப்​படுத்​தப்​பட்​டனர். அங்கு மீட்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதனிடையே வெள்​ளம் மற்​றும் நிலச்​சரி​வில் சிக்கி 11 பேர் உயி​ரிழந்​திருப்​ப​தாக அதி​காரி​கள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் வெள்​ளத்​தில் அடித்​துச் செல்லப்பட்​டனர். அவர்​களை தேடும் பணி​யில் மீட்​புக் குழு ஈடுபட்​டுள்​ளது.

கனமழை காரண​மாக, ரியாசி மாவட்​டத்​தில் உள்ள சலால் அணை​யின் அனைத்து மதகு​களை​யும் திறக்க அதி​காரி​கள் உத்தர​விட்​டனர். இதனால் செனாப் நதி​யின் நீர்​மட்​டம் கணிச​மாக உயர்ந்​துள்​ளது. நிலைமை சீராகும் வரை நதிக்​கரை​யில் வசிக்​கும் மக்​கள் அதன் அரு​கில் செல்ல வேண்​டாம் என்​றும், மீன்​பிடித்​தல், குளித்​தல், கால்​நடைகளை மேய்த்​தல் அல்​லது நதி​யைக் கடக்க முயற்​சிப்​ப​தைத் தவிர்க்​கு​மாறும் அதி​காரி​கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles