ஈரான் போரில் சமரசம் செய்த நிலையில் அமெரிக்காவிடம் 10 பில்லியன் டொலர் நிதி உதவி கோரும் பாகிஸ்தான்

ஈரான் போரில் சமரசம் செய்த பாகிஸ்தான், அமெரிக்கா​விடம் ரூ.96 ஆயிரம் கோடி நிதி​யுதவி கோரி இருப்பதாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

பாகிஸ்​தான் கடந்த சில ஆண்​டு​களுக்கு முன்பு கடுமை​யான பொருளா​தார நெருக்​கடி​யில் சிக்​கியது. இதையடுத்​து, சர்​வ​தேச நாணய நிதி​யம் பாகிஸ்​தானுக்கு அவ்​வப்​போது நிதியுதவி வழங்கி வரு​கிறது.

இந்த ஐ.எம்.​எவ். மீட்​புத் திட்​டம் அமுலில் உள்ள போதி​லும், அந்​நாட்​டில் பல தசாப்​தங்​களில் இல்​லாத மோச​மான பொருளா​தார நெருக்​கடி தொடர்​கிறது. சீனா, சவுதி அரேபியா உள்ளிட்ட நட்பு நாடுகளிடமிருந்து பெறப்படும் கடன் கால நீட்டிப்பு ஆகியவற்றையே பெரிதும் சார்ந்துள்ளது. இதனால், வெளிநாட்டு நிதி உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால் அந்நாடு எளிதில் பாதிப்புக்குள்ளாகும் சூழ்நிலை நிலவுகிறது.

இந்​நிலை​யில், தனது பலவீன​மான பொருளா​தா​ரத்தை நிலைநிறுத்தும் முயற்​சி​யாக அமெரிக்​கா​விடம் பாகிஸ்​தான் அரசு நிதி​யுதவி கோரி இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது.

குறிப்​பாக, அமெரிக்க நிதி​யமைச்​சர் ஸ்காட் பெஸன்ட்​டிடம் சமர்ப்​பிக்​கப்​பட்ட கோரிக்​கை​யில், “5 ஆண்​டு​கள் வரை முதிர்வு காலம் கொண்ட 10 பில்​லியன் டாலர் மதிப்​பிலான (96 ஆயிரம் கோடி இந்திய ரூபாய்) ‘இருதரப்பு பரிவர்த்​தனை நிலைப்​படுத்​தல் ஆதரவு வசதியை வழங்க வேண்​டும்” என கேட்​டுக் கொண்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

அமெரிக்​க-ஈ​ரான் போரின்​போது இருதரப்​புக்​கும் இடையே, சமரச முயற்​சியை பாகிஸ்​தான் மேற்​கொண்​டது. இது அந்​நாட்​டின் ராஜதந்​திர அந்​தஸ்தை உயர்த்​தி​யது. இதனால்​தான் அமெரிக்காவிடம் நிதி​யுதவி கோரி உள்​ள​தாகக்​ கூறப்​படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles