யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை பிறப்பித்துள்ளது.
கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில், குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் முன்னிலையாகாத காரணத்தினாலேயே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என்பதுடன், வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவரது பிணையாளர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.
இதற்கமைவாக, குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக பிடியாணை பிறப்பிப்பதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
