அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சீன பொதுமக்கள் அச்சம்!

சீனாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள கிங்ஹாய் மாகாணத்தில், வெறும் 18 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு அப்பகுதி மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளன.

இன்று (28) அதிகாலை 11:16 மணி மற்றும் 11:34 மணி வரை நிலநடுக்கமானியில் முறையே 5.7 மற்றும் 5.8 ரிச்டர் அளவுகளாகப் பதிவாகியுள்ளன.

இது பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் (6 மைல்) ஆழத்தில் இந்த அதிர்வுகள் தோன்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், குறைந்த மக்கள் தொகை கொண்ட கிங்ஹாய் மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கம், அண்டை மாகாணமான கான்சுவில் உள்ள மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான லான்சூ வரையிலும் உணரப்பட்டதாக கூறப்படுகின்றது.

நிலநடுக்கத்தின் போது வீடுகளுக்குள் இருந்த விளக்குகள் குலுங்கியதாகவும், மலைப் பகுதியிலுள்ள செங்குத்துப் பாறைகளிலிருந்து புழுதி மேகங்கள் கிளம்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் அச்சமடைந்த பொதுமக்கள், தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் பாதுகாப்பிற்காகத் தஞ்சம் அடைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles