கர்நாடகத்தில் காவிரி நீர் விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜய்யின் போஸ்டர் கிழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி நீர் தொடர்பாக தமிழ்நாடு – கர்நாடகம் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு இருந்து வரும்நிலையில், தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்து விடுமாறு காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு சமீபத்தில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு கர்நாடகத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் நடத்தி வருகின்றனர். இதனிடையே, காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரை தமிழக முதல்வர் விஜய் சந்தித்துப் பேசவுள்ளார்.
இந்த நிலையில், கர்நாடகத்தின் மாண்டியாவில் தமிழக முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்கில் ஒட்டப்பட்டிருந்த விஜய்யின் போஸ்டரை கிழித்து விஜய சேனை என்ற கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
