வவுனியா புளியங்குளம் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் என புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து முல்லைத்தீவு நோக்கிச் பயணித்த சொகுசு பஸ் ஒன்று, யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில், புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
