ஓமந்தையில் பஸ்ஸூக்கு காந்திருந்த ஒருவர் கூலர் வாகனம் மோதி மரணம்!

ஓமந்தை பனிக்கன் நீராவி பகுதியில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் நின்றிருந்த ஒருவர் மீது இன்று சனிக்கிழமை அதிகாலை கூலர் வாகனம் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அதே கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து தொடர்பில் தகவல் அறிந்த ஓமந்தை பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், உயிரிழந்தவரின் சடலம் மேலதிக சட்ட மருத்துவ நடவடிக்கைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

விபத்திற்கான காரணம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

A9 வீதியில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக இடம்பெறும் விபத்துகள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles