பிரித்தானியாவில் குழந்தைகளுக்கான இலவச பேருந்து சேவை அறிமுகம்

பிரித்தானியாவில் குழந்தைகளுக்கு இலவச பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று முதல் அமுலுக்கு வரும் இந்த திட்டம் இம்மாதம் முழுவதும் தொடரும்.

இதற்கமைய ஐந்து முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெரும்பாலான உள்ளூர் பேருந்து சேவைகளில் இலவசமாகப் பயணிக்கலாம்.

கோடை விடுமுறையில் குடும்பங்கள் மீதான நிதிச் சுமையை குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, குடும்பங்களின் வாழ்க்கைச் செலவுகளுக்கு உதவுகிறது என்று போக்குவரத்துத் துறைக்கான மாநிலச் செயலாளர் ஹைடி அலெக்சாண்டர் தெரிவித்தார்.

மேலும், அரசாங்கம் ‘கிரேட் பிரிட்டிஷ் சம்மர் சேவிங்ஸ்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், குழந்தைகளின் உணவு, நாடக மற்றும் சினிமா டிக்கெட்டுகள் மற்றும் குடும்ப பொழுதுபோக்குகள் மீதான மதிப்புக்கூட்டு வரியை குறைத்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles