தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் மேல் நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, நீர் தேக்கத்தின் பாதுகாப்பு மற்றும் கீழ்நோக்கி ஏற்படக்கூடிய பெருவெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நீர் தேக்கத்தின் வான் கதவுகள் முறைப்படி திறக்கப்படுவதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று பிற்பகல் 3.00 மணியளவில் நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் மற்றும் சேறு வெளியேற்றும் மதகுகள் திறக்கப்படுவதுடன், இதன் மூலம் வினாடிக்கு சுமார் 250 கன அடி வீதத்தில் கொத்மலை ஓயாவுக்கு நீர் திறந்து விடப்பட்டது.
இதன்காரணமாக கொத்மலை அணைக்கட்டுக்கு கீழ் உள்ள கொத்மலை ஓயாவின் நுகவெல, ரிவர்சைட், மாவத்துர பகுதிகள் மற்றும் மகாவலி கங்கையின் உலப்பனை பகுதியிலிருந்து கம்பளை, வெலிகல்ல, கெலிஓயா, பேராதனை, கடுகஸ்தோட்டை மற்றும் பொல்கொல்லை வரையிலான பகுதிகளிலுள்ள தாழ்நில நிலங்கள் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதால், இது குறித்து அவதானத்துடன் இருக்குமாறு அவ்அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.
