பாகிஸ்தானில் அமைதிப் பேரணியில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் – 17 பேர் பலி!

வடமேற்கு பாகிஸ்தானில் அமைதிப் பேரணியின்போது நிகழ்ந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 17 பேர் பலியாகினர்.

பாகிஸ்தான் நாட்டில் சுவாத் மாவட்டத்தின் கபால் நகரில் உள்ள காவல் நிலையத்திற்கு எதிரே ‘சுவாத் அமைதிப் பேரணி’ ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் ஐந்து பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர். 10 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 3 பேர் பலியானதைத்தொடர்ந்து, இத்தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது என்று பொலிஸார் இன்று திங்கட்கிழமை கூறினர்.

இருப்பினும், இத்தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்போ அல்லது தனிநபரோ உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை.

கடந்த சில மாதங்களாகப் பாதுகாப்புச் சூழல் மோசமடைந்ததற்கு பொலீஸின் செயலற்ற தன்மையே காரணம் என்று அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles