சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார் தனுஷ்

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது.

2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் இன்று நடைபெற்றது.

விழாவில், ஜனாதிபதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு விருதாளர்களை பாராட்டி, அதற்கான விருதுகளை வழங்கினர்.

சிறப்பு அங்கீகாரம் பிரிவில், சோலா தோரா அவுர் சூரி என்ற ஹிந்தி படத்தை இயக்கிய ஜெய்மின் மோடிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. பத்ரகாளி நாடகம் என்ற மலையாள படத்திற்காக ஆனந்தஜோதி பாலக்பள்ளிக்கு அளிக்கப்பட்டது.

ஹிந்தி, காஷ்மீரி மொழியில் வெளியான ஓபுர் என்ற படம் சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.

அதன் திரைக்கதை ஆசிரியர் பராஸ் அலிக்கு விருது வழங்கப்பட்டது.

கேப்டன் மில்லர் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடுவர் குழுவின் சிறப்பு விருதை நடிகர் தனுஷூக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கினார்.

இதேபோன்று சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது ராயன் படத்திற்கு அளிக்கப்பட்டது. சிறந்த இயக்குநர் விருதை அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பெற்றுக்கொண்டார்.

சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் பெற்றார்.

சிறந்த சண்டை பயிற்சி இயக்குநராக மகாராஜா படத்தின் சண்டை காட்சிகளை வடிவமைத்த அனல் அரசு பெற்றுக் கொண்டார். சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை பிரம்மயுகம் படத்தின் கமராமேன் ஷெகனாத் ஜலாலுக்கு வழங்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles