சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறையைச் சேர்ந்த சிவராஜா அனோஜனுக்கு விடுதலையையும் மன்னிப்பையும் கோரி யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது.
வடமாகாண சபரிமலை யாத்திரை ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் மதத் தலைவர்கள், சிவில் சமூக அரசியல் பிரதிநிதிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்தப் போராட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் தலையிட்டு அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
போராட்டத்தின் இறுதியில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.
