உலகின் முதல் தரவரிசை ஈட்டி எறிதல் வீரராக ருமேஷ் தரங்க

இலங்கையின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க, ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் உலகின் முதல் தரவரிசை வீரராக முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 89.75 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கத்தை வென்ற அவர், 1,354 புள்ளிகளுடன் உலக தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இதன்மூலம், உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இலங்கை வீரர் என்ற பெருமையையும் ருமேஷ் தரங்க பெற்றுள்ளார்.

இந்தச் சாதனை, இலங்கை விளையாட்டுத் துறைக்கும், குறிப்பாக தடகள வரலாற்றிற்கும் மற்றுமொரு முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகின்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles